விண்வெளியில் ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம் - ஜேம்ஸ் வெப் புகைப்படம் பகிர்வு

December 20, 2023

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்வெளியில் இருந்து, கிறிஸ்துமஸ் மரம் போல காட்சி அளிக்கும் விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 2500 ஒளி ஆண்டுகள் தொலைவில், NGC 2264 என்று பெயரிடப்பட்டுள்ள விண்மீன் கூட்டம் உள்ளது. இது நமது பால்வீதி மண்டலத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. இங்குள்ள பல்வேறு விண்மீன்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், கிறிஸ்துமஸ் மரம் போன்ற உருவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை […]

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்வெளியில் இருந்து, கிறிஸ்துமஸ் மரம் போல காட்சி அளிக்கும் விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 2500 ஒளி ஆண்டுகள் தொலைவில், NGC 2264 என்று பெயரிடப்பட்டுள்ள விண்மீன் கூட்டம் உள்ளது. இது நமது பால்வீதி மண்டலத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. இங்குள்ள பல்வேறு விண்மீன்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், கிறிஸ்துமஸ் மரம் போன்ற உருவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை படம் பிடித்துள்ள ஜேம்ஸ் வெப், குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்து, மிகச்சரியாக கிறிஸ்துமஸ் மரம் போன்ற அமைப்பை கொண்டு வந்துள்ளது. ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ள இந்த புகைப்படத்தை, நாசா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu