வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஜுனோ விண்கலம், வியாழனின் மாய நிலவு என்று அழைக்கப்படும் 5வது நிலவை படம் பிடித்துள்ளது.
கடந்த 1892 ஆம் ஆண்டு வியாழன் கோளின் ஐந்தாம் நிலவான Amalthea முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய நிலவான இதை ஜூனோ விண்கலம் படம் பிடித்துள்ளது. கடந்த மார்ச் 7ஆம் தேதி வியாழன் கோளை 59 வது முறையாக நெருங்கிய ஜுனோ விண்கலம், இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த சமயத்தில் வியாழன் கோளில் இருந்து 165000 மைல் தொலைவில் ஜுனோ விண்கலம் கடந்து சென்றது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், வியாழன் கோளின் அருகில் சிறிய சிவப்பு நிற புள்ளியாக இந்த நிலவு உள்ளது. சூரிய மண்டலத்தில் அதிக சிவப்பாக உள்ள விண் பொருள் இந்த நிலவு என நாசா கூறுகிறது. உருளைக்கிழங்கை போல தோற்றம் கொண்ட இந்த சிறிய நிலவு, 0.498 பூமி தினங்களில் வியாழன் கோளை சுற்றி வருகிறது.