புதன் கிரகத்தில் பனி உள்ளது - ஆச்சரியமான தகவலை பகிர்ந்த நாசாவின் மெசஞ்சர்

புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. மெசஞ்சர் புதிதாக அளித்த தகவல்களின்படி, புதன் கிரகத்தில் பனி உள்ளது தெரிய வந்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் புதன் கிரகம் அதிக வெப்பம் கொண்டதாகும். அதன் மேற்பரப்பில் 426 செல்சியஸ் க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும். இதனால், அங்கு தண்ணீர் எந்த வடிவிலும் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்டு வந்தது. ஆனால், மெசஞ்சர் அனுப்பிய தகவலின்படி, பூமியில் இருந்து அதிநவீன தொலைநோக்கி கருவிகள் […]

புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. மெசஞ்சர் புதிதாக அளித்த தகவல்களின்படி, புதன் கிரகத்தில் பனி உள்ளது தெரிய வந்துள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் புதன் கிரகம் அதிக வெப்பம் கொண்டதாகும். அதன் மேற்பரப்பில் 426 செல்சியஸ் க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும். இதனால், அங்கு தண்ணீர் எந்த வடிவிலும் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்டு வந்தது. ஆனால், மெசஞ்சர் அனுப்பிய தகவலின்படி, பூமியில் இருந்து அதிநவீன தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில், புதன் கிரகத்தின் துருவப் பகுதிகளில் பனி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தில் உள்ள மறைவான துருவப் பகுதிகள் சூரிய வெளிச்சத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் பனி காணப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். துருவப் பகுதியில் மட்டும் பனி உருவானது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu