வரும் அக்டோபர் 12ஆம் தேதி, நாசாவின் விண்கல் ஆய்வுத் திட்டம் ஏவப்படுகிறது. விண்கல் ஆய்வுக்காக சைக் என்ற விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
சைக் விண்கலம், சூரிய சக்தியின் துணையுடன் விண் கல்லை நோக்கி பயணப்படவுள்ளது. மேலும், அதன் பயணத்தின் வழியில், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசையினாலும் வேகம் பெற உள்ளது. குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும், விண்கல் குறித்த ஆய்வுகளில் சைக் விண்கலம் ஈடுபடும். இந்த திட்டத்திற்காக, பல்வேறு நாசா விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். இதன் மொத்த மதிப்பு 10000 குவாட்டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, பூமியில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பை விட இந்த விண்வெளி திட்டத்திற்கான மதிப்பு அதிகம். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் சைக் விண்கலத்தை சுமந்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.