மனிதனால் அனுப்பப்பட்ட வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து அதிக தொலைவுக்கு சென்றுள்ள முதல் விண்கலம் ஆகும். இந்த காலத்துடனான தொடர்பு 5 மாதங்களாக தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக சரியான தகவல் தொடர்பு கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வாயேஜர் 1 விண்கலம் தொடர்பில்லாத தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி, வாயேஜர் 1 அனுப்பிய செய்தியே இறுதியாக கிடைக்கப்பெற்ற முறையான செய்தி. இந்த நிலையில், வாயேஜர் 1 உடனான தொடர்பு பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து நாசா ஆய்வு செய்து வந்தது. அதன்படி, பாதிப்பு நேர்ந்த எப்டிஎஸ் கருவியை சீர் செய்ததில் தற்போது மீண்டும் தொடர்பு கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி, வாயேஜர் 1 கலத்துக்கு பூமியிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் 20 ம் தேதி, வாயேஜர் 1 கலத்தில் இருந்து மறு செய்தி கிடைக்கப்பெற்றது. இதனால் நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.