ரஷ்யாவை சீனா இயக்குகிறது - நேட்டோ குற்றச்சாட்டு

July 12, 2024

ரஷ்யாவை சீனா இயக்குகிறது என நேட்டோ அறிக்கை குற்றச்சாட்டு வைத்துள்ளது. நேட்டோ அமைப்பின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பில் உள்ள 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உக்ரைன் போர் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை செய்தனர். மாநாட்டின் இறுதியில் அனைவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது, சீன அரசின் […]

ரஷ்யாவை சீனா இயக்குகிறது என நேட்டோ அறிக்கை குற்றச்சாட்டு வைத்துள்ளது.

நேட்டோ அமைப்பின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பில் உள்ள 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உக்ரைன் போர் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை செய்தனர். மாநாட்டின் இறுதியில் அனைவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது, சீன அரசின் கொள்கைகள் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக உள்ளது. ரஷ்யாவும், சீனாவும் தங்களது உறவுகளை பலப்படுத்துவது கவலைக்குரிய ஒன்றாகும். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளது. அது ரஷ்யாவை இயக்குகிறது. ரஷ்யாவிற்கு தேவையான ராணுவ தளவாடங்களை சீனா வழங்கி வருகிறது. சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும். எனவே ஐநாவின் கொள்கைகளை நிலை நிறுத்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். ரஷ்யாவிற்கு அளித்து வரும் பொருள் மற்றும் அரசியல் ஆதரவை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதோடு சீனா கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu