ஏப்ரல் 27, கெய்வ் சோவியத் யூனியனின் 60வது ஆண்டு நினைவாக 1982 இல் அமைக்கப்பட்ட எட்டு மீட்டர் உயரம் கொண்ட மாபெ௫ம் வெண்கலச் சிலை ஒரு உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளியை ஒரு பீடத்தில் சித்தரித்து, சோவியத் நட்பு வரிசையை உணர்த்தும் விதமாக கெய்வின் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மாஸ்கோவின் படையெடுப்பின் எதிரொலியாக கெய்வின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஆணைப்படி ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நட்பைக் குறிக்கும் வகையில், இருந்த இந்த சோவியத் கால நினைவுச்சின்னத்தை செவ்வாயன்று உக்ரேனிய அதிகாரிகள் அகற்றினர். “பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ஆயிரக்கணக்கானவர்களை கொன்றது பின்பு காயப்படுத்தியது, அத்துடன் நகரங்களையும் அழித்து, மேலும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நாட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது. ரஷ்யாவின் இந்த மோசமான நடத்தையால் ரஷ்ய-உக்ரேனிய நட்புக்கான நினைவுச்சின்னம் இ௫ப்பது அர்த்தமற்றது” என்று வடிவமைப்பாளர்களில் ஒருவரான Serhiy Myrhorodsky கூறினார்.














