பாகிஸ்தானில், வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசியலில் முற்றிலும் எதிர்பாராத திருப்பமாக, நவாஸ் ஷெரிப் தலைமையிலான கட்சி, பிலாவல் பூட்டோ கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது.நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் கீழ் இயங்கி வரும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராக, புதிய கூட்டணியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி களமிறங்குகிறது. ஜி டி ஏ, ஜி யு ஐ எப் போன்ற முக்கிய கட்சிகளுடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியுடன் இணையலாம் என கருதப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.