நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் சர்மா ஒலி வெற்றி

July 22, 2024

நேபாள பிரதமர் சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். நேபாளத்தில் பிரசன்டா அரசு கடந்த 12ஆம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சர்மா ஒலி ஆட்சி அமைக்க நேபாள காங்கிரஸ் கட்சி ஆதரவு தர முன் வந்தது. அதையடுத்து சர்மா ஒலியை புதிய பிரதமராக கடந்த 14ஆம் தேதி ஜனாதிபதி ராம் சந்திரா பௌடல் நியமித்தார். கடந்த 15ஆம் தேதி சர்மா ஒலி நான்காவது முறையாக பிரதமராக பதவி […]

நேபாள பிரதமர் சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

நேபாளத்தில் பிரசன்டா அரசு கடந்த 12ஆம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சர்மா ஒலி ஆட்சி அமைக்க நேபாள காங்கிரஸ் கட்சி ஆதரவு தர முன் வந்தது. அதையடுத்து சர்மா ஒலியை புதிய பிரதமராக கடந்த 14ஆம் தேதி ஜனாதிபதி ராம் சந்திரா பௌடல் நியமித்தார். கடந்த 15ஆம் தேதி சர்மா ஒலி நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 21 புது மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

அரசு சாசனப்படி 30 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். அதற்காக நேபாள நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்பொழுது சர்மா ஒலி நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது எம்பிக்கள் விவாதம் நடத்தினர். அதற்கு சபாநாயகர் தேவராஜ் இரண்டு மணி நேரம் ஒதுக்கீடு செய்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு சர்மா ஒலி பதில் அளிக்கையில், நான் ஊழலில் சிக்கியது கிடையாது. யாரும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன். நிலையான அரசமைக்க இரண்டு பெரிய கட்சிகள் ஒன்று கூடி உள்ளன என்று கூறினார்.

பின்னர் நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 275 எம்பிக்களில் 263 பேர் மட்டும் சபைக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் வாக்கெடுப்பை புறக்கணித்தார். மீதமுள்ளவர்களில் சர்மா ஒலிக்கு ஆதரவாக 188 எம்பிக்கள் ஓட்டு போட்டனர். எதிராக 74 பேர் வாக்களித்தனர். எனவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சர்மா ஒலி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தேவராஜ் திமிரி அறிவித்தார். இதன் மூலம் சர்மா ஒலி தனது பெரும்பான்மை நிரூபித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu