நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி

March 14, 2024

நேபாளத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் புஷ்பகமல் பிரசன்னா வெற்றி பெற்றுள்ளார். நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் புஷ்பகாமல் பிரசன்னா வெற்றி பெற்றுள்ளார். நேபாள நாடாளுமன்றம் 275 இடங்களைக் கொண்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 157 எம்பிக்கள் வாக்களித்தனர். சிபிஎன் கட்சித் தலைவரான பிரசண்டா தேவுப்பா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 15 மாதங்களுக்கு முன் ஆட்சி அமைத்தார். பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் […]

நேபாளத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் புஷ்பகமல் பிரசன்னா வெற்றி பெற்றுள்ளார்.

நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் புஷ்பகாமல் பிரசன்னா வெற்றி பெற்றுள்ளார். நேபாள நாடாளுமன்றம் 275 இடங்களைக் கொண்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 157 எம்பிக்கள் வாக்களித்தனர். சிபிஎன் கட்சித் தலைவரான பிரசண்டா தேவுப்பா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 15 மாதங்களுக்கு முன் ஆட்சி அமைத்தார். பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் கூட்டணி முறிந்தது. அதனையடுத்து கடந்த நான்காம் தேதி கூட்டணி முறிந்ததாக பிரதமர் பிரசன்னா அறிவித்தார். முன்னாள் பிரதமர் கே பி ஒலியின் கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தினார். நேபாள அரசமைப்பு சட்டத்தின்படி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை ஒரு கட்சி நீக்கிக்கொண்டால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்து பிரதமர் தன் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் 3-வது முறையாக வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu