நேபாளத்தில் நிதி நெருக்கடி – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிப்பு

April 27, 2022

காத்மண்டு, ஏப்ரல் 27, 2022: கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வருவாய் இழப்பு காரணமாக, நேபாள அரசு ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

காத்மண்டு, ஏப்ரல் 27, 2022:
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வருவாய் இழப்பு காரணமாக, நேபாள அரசு ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நேபாளத்தில், சனிக்கிழமை பொது விடுமுறையாக இருந்துவரும் நிலையில், இனி ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கும் என்ற அறிவிப்பை அரசின் செய்தி தொடர்பாளர் ஞானேந்திர பகதூர் கார்க்கி அறிவித்தார். மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என்று கூறிய அவர், வார நாட்களில் பணி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இருக்கும் என்று தெரிவித்தார். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் நேபாளம், ரஷ்யா – உக்ரைன் இடையிலானப் போர் நீண்டுகொண்டே போவதால், மிகவும் மோசமான நிதி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் அன்னியச் செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சிப்புகள், மதுபானங்கள், சிகரெட்டுகள், புகையிலைப் பொருட்கள், வைரங்கள், கைபேசிகள், தொலைக்காட்சிகள், இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் SUV வகை வாகனங்கள், பொம்மைகள், விளையாட்டு அட்டைகள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய, நேபாள அரசு தடை விதித்துள்ளது. எனினும், இந்த பொருட்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu