உருகும் பனிப்பாறைகள் - ஐ.நா. பொது சபையில் நேபாள பிரதமர் முறையீடு

September 17, 2024

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உருகும் பனிப்பாறைகள் பிரச்சினையை முன்வைக்க திட்டமிட்டுள்ளார். புவியியல் மாற்றங்கள் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக இமயமலைப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஐ.நா. அறிக்கையில், கடல் நீர்மட்டம் முன்னர் மதிப்பிட்டதைவிட அதிகரித்து, தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள் மற்றும் கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கையுடன் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் […]

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உருகும் பனிப்பாறைகள் பிரச்சினையை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

புவியியல் மாற்றங்கள் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக இமயமலைப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஐ.நா. அறிக்கையில், கடல் நீர்மட்டம் முன்னர் மதிப்பிட்டதைவிட அதிகரித்து, தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள் மற்றும் கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கையுடன் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளார் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி. அவர், தனது முதற் வெளிநாட்டு பயணமாக வரும் 20-ம் தேதி அமெரிக்காவிற்கு புறப்பட்டு, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 'எதிர்காலத்திற்கான மாநாட்டில்' கலந்துகொள்கிறார். நாடாளுமன்றத்தில் பேசும்போது, மனிதன் மற்றும் பூமியின் பாதுகாப்பு, இமயமலை மற்றும் பெருங்கடல்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் விவகாரங்களில் நேபாளத்தின் தெளிவான பார்வையை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu