நேபாளத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் பிளவு

May 8, 2024

நேபாளத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமராக புஷ்ப கமல் தஹல் பிரசந்தா பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி கட்சியில் உட்கட்சி சிக்கல் உச்சத்தை எட்டி உள்ளது. அந்த கட்சியின் தலைவருக்கு எதிராக கட்சியை சேர்ந்தவர்கள் பிரிந்துள்ளனர். நேபாள ஜனதா சமாஜ்பதி கட்சியின் தலைவர் நேபாளத்தின் துணை பிரதமராக செயல்பட்டு வரும் உபேந்திர யாதவ் ஆவர். இந்த […]

நேபாளத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமராக புஷ்ப கமல் தஹல் பிரசந்தா பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி கட்சியில் உட்கட்சி சிக்கல் உச்சத்தை எட்டி உள்ளது. அந்த கட்சியின் தலைவருக்கு எதிராக கட்சியை சேர்ந்தவர்கள் பிரிந்துள்ளனர்.

நேபாள ஜனதா சமாஜ்பதி கட்சியின் தலைவர் நேபாளத்தின் துணை பிரதமராக செயல்பட்டு வரும் உபேந்திர யாதவ் ஆவர். இந்த நிலையில், அசோக் ராய் தலைமையில் அவருக்கு எதிராக அணி திரண்டுள்ள கட்சியினர், தனியாக கட்சி தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த அணியில் 29 மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் 7 எம்பிக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆளும் கூட்டணியில் இருந்து எதிர்க்கட்சிக்கு பலர் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நேபாளத்தில் அரசியல் குழப்ப சூழல் உச்சத்தை எட்டி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu