நெஸ்லே நிகர லாபம் 38% உயர்வு

நெஸ்லே நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நெஸ்லே நிறுவனத்தின் இந்திய பிரிவு 698.34 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில் 37% உயர்வாகும். மேலும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17% உயர்ந்து 4658.5 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விற்பனை வளர்ச்சி 14.6% உயர்வை பதிவு செய்துள்ளதாக நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சேர்மன் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், நெஸ்லே […]

நெஸ்லே நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நெஸ்லே நிறுவனத்தின் இந்திய பிரிவு 698.34 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில் 37% உயர்வாகும். மேலும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17% உயர்ந்து 4658.5 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விற்பனை வளர்ச்சி 14.6% உயர்வை பதிவு செய்துள்ளதாக நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சேர்மன் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் குறிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நெஸ்லே முடிவுகள் சாதகமாக இருந்தாலும், பங்குச்சந்தையில் நெஸ்லே பங்குகள் 3% வரை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. விரைவில் இவை மீண்டெழும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu