அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உரையாற்ற உள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அடுத்த மாதம் 24 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அவர் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது குறித்து அவைத்தலைவர் மைக் ஜான்சன் கூறுகையில், நம் நாடு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் இடையே உருவாகி வரும் நட்புறவு ஆபத்தானது. எனவே உலக அமைதிக்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
காசாவில் போர் குற்றத்தில் ஈடுபடுவதாக நேதன்யாகு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் நீண்டகால ராணுவ கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நேதன்யாகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேச அமெரிக்க அழைத்துள்ளது. எனினும் இது சர்ச்சையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














