நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு - இந்தியாவில் இன்று முதல் தடை

July 20, 2023

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ், இந்தியாவில் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் சந்தாதாரர் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு பதிவாகி இருந்தாலும், லாபத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், பாஸ்வேர்ட் பகிர்வு அம்சம் இந்தியாவில் இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மே மாதத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், பாஸ்வேர்ட் பகிரும் அம்சத்தை நெட்பிளிக்ஸ் தடை செய்தது. தற்போது, இன்று முதல் இந்தியாவிலும் இது தடை செய்யப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து, இந்தோனேசியா, குரோசியா, […]

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ், இந்தியாவில் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் சந்தாதாரர் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு பதிவாகி இருந்தாலும், லாபத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், பாஸ்வேர்ட் பகிர்வு அம்சம் இந்தியாவில் இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், பாஸ்வேர்ட் பகிரும் அம்சத்தை நெட்பிளிக்ஸ் தடை செய்தது. தற்போது, இன்று முதல் இந்தியாவிலும் இது தடை செய்யப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து, இந்தோனேசியா, குரோசியா, கென்யா ஆகிய நாடுகளிலும் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடை செய்யப்படுகிறது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் வருவாயை அடுத்த அரையாண்டுக்குள் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu