சென்னையில் புதிய 'அடாப்டிவ்' சிக்னல்கள்

August 28, 2024

சென்னையில் போக்குவரத்து மேலாண்மைக்கு புதிய 'அடாப்டிவ்' சிக்னல்கள் திட்டம். சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களும், பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதனைச் சமாளிக்க அரசு மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 55 முக்கிய சந்திப்புகளில் புதிய 'அடாப்டிவ்' சிக்னல்களை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். இந்த சிக்னல்கள், தற்போதைய போக்குவரத்து நிலையைப் பொறுத்து காத்திருப்பு நேரத்தை தானாகவே மாற்றும். இது, பழைய முறைச் சிக்னல்களுடன் ஒப்பிடும் போது, […]

சென்னையில் போக்குவரத்து மேலாண்மைக்கு புதிய 'அடாப்டிவ்' சிக்னல்கள் திட்டம்.

சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களும், பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதனைச் சமாளிக்க அரசு மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 55 முக்கிய சந்திப்புகளில் புதிய 'அடாப்டிவ்' சிக்னல்களை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். இந்த சிக்னல்கள், தற்போதைய போக்குவரத்து நிலையைப் பொறுத்து காத்திருப்பு நேரத்தை தானாகவே மாற்றும். இது, பழைய முறைச் சிக்னல்களுடன் ஒப்பிடும் போது, பரபரப்பான சாலைகளில் 120 வினாடிகள் வரை பச்சை விளக்கை நீட்டிக்கவும், குறைவான நெரிசல் உள்ள சந்திப்புகளில் 30 வினாடிகளாகக் குறைக்கவும் செய்யும். இந்த திட்டம் ரூ.11 கோடி செலவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu