கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் மோதல்களுக்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது புதிய ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அதன்படி இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என்பதில் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பதற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பேசி, இருவரும் ராணுவ வீரர்களை பின்வாங்கி அமைதியை நிலைநாட்ட ஒப்புக்கொண்டுள்ளனர்.