வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கையாக 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்திவிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், சென்னை, எழும்பூர், புதுப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கையாக, வடகிழக்கு பருவமழைக்கு 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்திவிட்டுள்ளது. அதன்படி செயற்பொறியாளர் நிலைமையில் 38 பொறியாளர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு அலவலராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.














