ரூபாய் நோட்டு வரைபட சர்ச்சை - நேபாள அதிபரின் பொருளாதார ஆலோசகர் பதவி விலகல்

May 14, 2024

நேபாள நாடு புதிதாக அறிமுகம் செய்த ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டின் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பகுதிகள் நேபாளத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் பகுதிகள் இணைக்கப்பட்டதை விமர்சித்த நேபாள அதிபரின் பொருளாதார ஆலோசகர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாளத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டு, புதிய நேபாள வரைபடம் அந்நாட்டின் 100 ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட இருந்தது. நெடு நாட்களாக நேபாளம் இந்த பகுதிகளுக்கு உரிமை கோரி […]

நேபாள நாடு புதிதாக அறிமுகம் செய்த ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டின் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பகுதிகள் நேபாளத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் பகுதிகள் இணைக்கப்பட்டதை விமர்சித்த நேபாள அதிபரின் பொருளாதார ஆலோசகர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாளத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டு, புதிய நேபாள வரைபடம் அந்நாட்டின் 100 ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட இருந்தது. நெடு நாட்களாக நேபாளம் இந்த பகுதிகளுக்கு உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேபாளம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த சிரஞ்சீவி நேபால் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இவர் அந்நாட்டின் அதிபர் ராம்சந்தர் பௌடேலின் பொருளாதார ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu