2025-26 பட்ஜெட்டில் புதிய நேரடி வரி சட்டம் மற்றும் ஊதிய உயர்வு

January 20, 2025

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில், 8-வது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வின் அறிவிப்பு, புதிய நேரடி வரி சட்டத்தின் மசோதா போன்ற […]

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில், 8-வது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வின் அறிவிப்பு, புதிய நேரடி வரி சட்டத்தின் மசோதா போன்ற முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 63 ஆண்டுகளாக நிலவும் வருமான வரி சட்டத்தை மாற்றும் முயற்சியில், புதிய விதிகளுக்கு நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வந்துள்ளனர்.

அதிக அளவிலான வரி விலக்கை கோரியுள்ள சாமானியவர்களுக்கு, இம்முறை வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய கருவியாக இருக்கும். 8-வது ஊதியக் குழு ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தபோதும், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வருமான வரி விலக்கு கோருகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu