நெல்லை மருத்துவமனையில் புதிய சுகாதார வசதிகள்: பெண்களுக்கான பிங்க் சோன் அறைகள் திறப்பு

November 18, 2024

நெல்லையில் புதிய மருத்துவ வசதிகள், பெண்கள் பயன்பாட்டிற்கு பிங்க் சோன் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டு, அவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடங்களில், பெண்கள், பெண் மருத்தவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 'பிங்க் சோன்' என அழைக்கப்படும் தனி ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், 450 படுக்கை வசதிகள் மற்றும் 10 ஆபரேஷன் தியேட்டர்களுடன் சுமார் ₹72 கோடியின் […]

நெல்லையில் புதிய மருத்துவ வசதிகள், பெண்கள் பயன்பாட்டிற்கு பிங்க் சோன் அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டு, அவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடங்களில், பெண்கள், பெண் மருத்தவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 'பிங்க் சோன்' என அழைக்கப்படும் தனி ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், 450 படுக்கை வசதிகள் மற்றும் 10 ஆபரேஷன் தியேட்டர்களுடன் சுமார் ₹72 கோடியின் பணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மார்ச் மாதத்திற்குள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 22 புதிய மருத்துவமனைகள் அமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 10 புதிய மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர். மா. சுப்ரமணியன் தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு ஜனவரி மாதம் தேர்வுகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu