டிசம்பர் மாத யுபிஐ பரிவர்த்தனை 782 கோடி - வரலாற்று உச்சம்

January 2, 2023

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் யுபிஐ பண பரிவர்த்தனை எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 782 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய நவம்பர் மாதத்தை விட 7% கூடுதலாகும். மேலும், யுபிஐ பண பரிவர்த்தனை மூலம், 12.8 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகள் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, […]

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் யுபிஐ பண பரிவர்த்தனை எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 782 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய நவம்பர் மாதத்தை விட 7% கூடுதலாகும். மேலும், யுபிஐ பண பரிவர்த்தனை மூலம், 12.8 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகள் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக 700 கோடியைத் தாண்டி டிஜிட்டல் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும், 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7404 கோடியாகவும், பரிவர்த்தனை தொகை 125 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை அடிப்படையில் 90% மற்றும் தொகை அடிப்படையில் 76% கூடுதல் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu