புதிய வருமான வரி மசோதா 2025 எந்த எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
இந்த மசோதா, வருமான வரிச் சட்டம் 1961-ஐ மாற்றி, சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிமைப்படுத்துகிறது. தற்போதைய வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளில் மாற்றமின்றி, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்யும் கால அவகாசம் 6 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பிரிவு 80M, குறைந்தபட்ச மாற்று வரி (MAT), மாற்று குறைந்தபட்ச வரி (AMT), மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நிறுவனங்களுக்கு இடையேயான ரூ.80 லட்சம் வரையிலான ஈவுத்தொகைக்கு வரிவிலக்கு வழங்கப்படுகிறது. 'முந்தைய ஆண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற பதிலாக 'வரி ஆண்டு' என்ற ஒரே சொல்லின் மூலம் தெளிவான வரி நடைமுறை அமையவுள்ளது.














