அண்டார்டிகாவில் புதிய பென்குயின் காலனி கண்டுபிடிப்பு

January 24, 2023

செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அண்டார்டிகா பகுதியை ஆராய்ந்ததில், பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அங்கு புதிய பென்குயின் காலனி இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேற்கு அண்டார்டிகாவில் உள்ள வெர்ளீஜர் பகுதியில் பென்குயின் எச்சங்கள் உள்ளது புகைப்படத்தில் தெரிந்துள்ளதால், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதாரணமாக பென்குயின் எச்சங்கள் உள்ள பாறைகள் நாற்றம் வீசுவதைப் போல, பனி சூழ்ந்த அந்த பகுதிகளில் எந்த வித நாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டாலும், ஜனவரி […]

செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அண்டார்டிகா பகுதியை ஆராய்ந்ததில், பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அங்கு புதிய பென்குயின் காலனி இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேற்கு அண்டார்டிகாவில் உள்ள வெர்ளீஜர் பகுதியில் பென்குயின் எச்சங்கள் உள்ளது புகைப்படத்தில் தெரிந்துள்ளதால், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதாரணமாக பென்குயின் எச்சங்கள் உள்ள பாறைகள் நாற்றம் வீசுவதைப் போல, பனி சூழ்ந்த அந்த பகுதிகளில் எந்த வித நாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டாலும், ஜனவரி 20ஆம் தேதி பென்குயின் விழிப்புணர்வு நாள் என்பதால், அன்றைய தினத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அண்டார்டிகா மொத்தமும் 66 பென்குயின் காலனிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய புதிய காலனி கண்டுபிடிப்பின் மூலம், அண்டார்டிகாவில் எதிர்பார்த்ததை விட அதிக பென்குயின்கள் உள்ளதற்கு 20% வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் காரணமாக 80% க்கும் அதிகமான பென்குயின் காலனிகள் இந்த நூற்றாண்டுக்குள் அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu