அதானி ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக புதிய மனு

September 19, 2023

உச்சநீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான அதானி குழும வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், புதிய திருப்பமாக, புது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை விசாரிக்க, உச்சநீதிமன்றம் நியமித்த குழுவை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரிக்க, 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவில், பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் ஓ பி பட் அங்கம் வகிக்கிறார். இவர் […]

உச்சநீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான அதானி குழும வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், புதிய திருப்பமாக, புது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை விசாரிக்க, உச்சநீதிமன்றம் நியமித்த குழுவை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரிக்க, 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவில், பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் ஓ பி பட் அங்கம் வகிக்கிறார். இவர் அதானி குழுமத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் கிரீன்கோ என்ற புத்தாக்க எரிசக்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார். எனவே, இந்த வழக்கில் அவரது நியமனம் செல்லாது என, எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அனாமிகா ஜெய்ஸ்வால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஓ பி பட் தவிர, குழுவில் உள்ள கே வி காம்நாத், சோமசேகர் சுந்தரேசன் ஆகியோரும் அதானி குழுமத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu