தமிழகத்தில் மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.கோவையில் தமிழ்நாடு அரசின் துணை நூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு துறை ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், சர்வதேச சந்தையின் வாய்ப்புகள் அதிகரிக்கவும், தொழிலில் உள்ள சிக்கல்கள் எவ்வாறு களையப்படலாம் எனவும் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. இதன் முதல் கருத்தரங்கம் 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் விரைவில் வெளியிடப்பட இருப்பதாகவும்,டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.