வானுயர கட்டிடங்களால் மூழ்கும் நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம் ஒரு கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான வான் உயர கட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வானுயர கட்டடங்கள் காரணமாக, நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தை சுற்றி உள்ள நீர்ப்பகுதிகளை விட நியூயார்க் நகரம் மூழ்கடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எர்த் 'ஸ் ஃப்யூச்சர் -ல் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரத்தில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அவை, தோராயமாக 1.7 […]

நியூயார்க் நகரம் ஒரு கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான வான் உயர கட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வானுயர கட்டடங்கள் காரணமாக, நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தை சுற்றி உள்ள நீர்ப்பகுதிகளை விட நியூயார்க் நகரம் மூழ்கடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எர்த் 'ஸ் ஃப்யூச்சர் -ல் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நியூயார்க் நகரத்தில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக, ஆண்டு ஒன்றுக்கு 1- 2 மில்லி மீட்டர் அளவு நியூயார்க் நகரம் மூழ்கி வருகிறது. செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, நியூயார்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. - இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu