2046-ல், விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பு - நாசா

வரும் 2046 ஆம் ஆண்டு, காதலர் தினத்தன்று, விண்கல் ஒன்று பூமியில் மோத சிறிய அளவில் வாய்ப்பு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. விண்வெளியில் உள்ள 2023 DW என்ற விண்கல், பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்த சாத்தியக்கூறு 625 இல் 1 என கணித்துள்ளது. ஆனால், நாசா, இதனை 560 இல் 1 ஆக கணித்துள்ளது. சுமார் 160 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், பூமிக்கு ஆபத்தை […]

வரும் 2046 ஆம் ஆண்டு, காதலர் தினத்தன்று, விண்கல் ஒன்று பூமியில் மோத சிறிய அளவில் வாய்ப்பு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.

விண்வெளியில் உள்ள 2023 DW என்ற விண்கல், பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்த சாத்தியக்கூறு 625 இல் 1 என கணித்துள்ளது. ஆனால், நாசா, இதனை 560 இல் 1 ஆக கணித்துள்ளது. சுமார் 160 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த விண்கல் குறித்து விண்வெளி ஆய்வு நிலையங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தற்போதைய நிலையில், இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து நேராது எனவும், இது பூமியுடன் நேரடியாக மோதும் வாய்ப்பு மிக மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே போல, பூமிக்கு மிக மிக நெருக்கமாக 10 விண்கற்கள் வரக்கூடும் என்று நாசா கணித்துள்ளது. அவை, 2046 முதல் 2054 ஆம் ஆண்டு வரை வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu