சர்வதேச ஓய்வுக்குப் பிறகு, அமெரிக்காவில் நடக்கும் MLC லீக்கில் பூரன் புதிய அத்தியாயம் தொடங்குகிறார்.
2023-ம் ஆண்டின் சாதனைகளை மீண்டும் மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ள பூரனுக்கு எதிர்பார்ப்பு அதிகம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவின் மெஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் அவர் இந்த அணிக்காக சிறப்பாக விளையாடி 388 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் 137 ரன்கள் விளாசி அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத்தந்தார். 2024-இல் 170 சிக்சர்கள் மற்றும் 2025 ஐபிஎலில் 500 ரன்கள் கடந்த பூரன், டி20 பவர் ஹிட்டராக திகழ்கிறார். 2025 எம்எல்சி நாளை துவங்குகிறது. முதல் போட்டியில் எம்ஐ நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.














