கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.