இந்தியாவில் 600 மில்லியன் டாலர் முதலீடு - நிஸ்ஸான், ரெனால்ட் அறிவிப்பு

February 13, 2023

சர்வதேச அளவில் பிரபலமான வாகன உற்பத்தியாளர்களான நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள், அடுத்த 5 - 6 ஆண்டுகளில், இந்தியாவில் 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை அறிவித்துள்ளன. இது இந்திய மதிப்பில் 5300 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மாடல் கார்களில் இந்த முதலீடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நிஸ்ஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வனி குப்தா, “இந்தியாவில், ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் ஆகியவை கூட்டாக […]

சர்வதேச அளவில் பிரபலமான வாகன உற்பத்தியாளர்களான நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள், அடுத்த 5 - 6 ஆண்டுகளில், இந்தியாவில் 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை அறிவித்துள்ளன. இது இந்திய மதிப்பில் 5300 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மாடல் கார்களில் இந்த முதலீடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நிஸ்ஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வனி குப்தா, “இந்தியாவில், ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் ஆகியவை கூட்டாக இணைந்து வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ள உள்ளன. குறிப்பாக, 4 எஸ்யூவிக்கள் மற்றும் 2 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் 3வது பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், இந்த முதலீடுகள் செய்யப்படுவது மிகவும் முக்கியமானது” என்று கூறினார். மேலும், இரு நிறுவனங்களும், 2025 ஆம் ஆண்டு முதல், புதிய மாடல்களை வெளியிட உள்ளதாக கூறிய அவர், மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் தீட்டப்படுவதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu