கடந்த வாரம், தொடர் உச்சங்களை பதிவு செய்து வந்த இந்திய பங்குச் சந்தையில், கடந்த இரு அமர்வுகளாக மிகப்பெரிய சரிவு பதிவானது. ஆனால், இன்றைய தினம், மிகப் பெரிய மாறுதல்கள் எதுவும் இன்றி, பங்குச்சந்தை நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 29.07 புள்ளிகள் சரிந்து 66355.71 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19680.6 புள்ளிகள் ஆக உள்ளது. இது முந்தைய நாளை விட 8.25 புள்ளிகள் உயர்வாகும்.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரையில், ஹிந்தால்கோ, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், என் டி பி சி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் அடைந்துள்ளன. ஐடிசி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ, ஏசியன் பெயிண்ட்ஸ், எல் அண்ட் டி, பிரிட்டானியா நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.