பிரதமரின் விவசாயிகள் உதவி தொகை ரூபாய் 6000க்கு மேல் அதிகரிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் கடந்த 2019 ஆம் தேதி ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 விதம் 6000 வழங்கப்பட்டு வருகின்றது. இவை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் தொகை குறித்த மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை 6000 க்கும் மேல் அதிகரிக்கும் திட்டம் இல்லை மேலும் இது குறித்த எந்த அறிவிப்புகளும் பரிசீலனையில் இல்லை என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இது வரை 15 கோடிக்கு அதிகமான விவசாயிகளுக்கு ரூபாய் 2.81 கோடி லட்சம் கோடிக்கும் அதிகமான உதவி தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது














