வியூ ஒன்ஸ் தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது - புதிய அம்சம் வெளியிடும் வாட்சப்

வாட்சப் நிறுவனம், அண்மையில் வியூ ஒன்ஸ் என்ற புதிய அம்சத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒருமுறை மட்டுமே புகைப்படம் அல்லது தகவல்களைப் பார்க்கும் வசதி கொண்டுவரப்பட்டது. தற்போது, கூடுதலாக, வியூ ஒன்ஸ் அடிப்படையில் அனுப்பப்படும் புகைப்படம், வீடியோ மற்றும் தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாத அம்சம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்து வாட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் மார்க் சக்கர்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சில புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்ய […]

வாட்சப் நிறுவனம், அண்மையில் வியூ ஒன்ஸ் என்ற புதிய அம்சத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒருமுறை மட்டுமே புகைப்படம் அல்லது தகவல்களைப் பார்க்கும் வசதி கொண்டுவரப்பட்டது. தற்போது, கூடுதலாக, வியூ ஒன்ஸ் அடிப்படையில் அனுப்பப்படும் புகைப்படம், வீடியோ மற்றும் தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாத அம்சம் கொண்டுவரப்படுகிறது.

இதுகுறித்து வாட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் மார்க் சக்கர்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சில புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்ய கூடாத நிலை உள்ளது. அதற்காகவே, வியூ ஒன்ஸ் அம்சம் கொண்டு வரப்பட்டது. தற்போது, அந்த அம்சத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தரும் விதமாக, வியூ ஒன்ஸ் தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது என்ற புதிய அம்சம் கொண்டுவரப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “இவ்வாறு அனுப்பப்படும் தகவல்களை, மறுமுனையில் பெறுபவர், வேறொருவருக்கு அனுப்பவோ, சொந்தக் கைபேசியில் சேமிக்கவோ முடியாது. ஆனால், அதனை பார்க்கும் பொழுது, வேறொரு புகைப்பட கருவி மூலம் படம் எடுத்து வைத்துக்கொள்ள முடியும். எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த அம்சத்தை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இது தொடர்பான முதல் அறிவிப்பு வெளியானது. அத்துடன், பயனர் ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்ற அம்சமும் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்ஷனில், வியூ ஒன்ஸ் அம்சம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் வியூ ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் அல்லது வீடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாமல் பாதுகாக்கும் வசதி வெற்றி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu