வடகொரியா ஏவுகணை சோதனை

May 17, 2024

இன்று வட கொரியா ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை ஒட்டி வடகொரியாவின் ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிறிய தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து, […]

இன்று வட கொரியா ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை ஒட்டி வடகொரியாவின் ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிறிய தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து, கூட்டு போர் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட மறுநாள் வடகொரியாவின் ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று, தென்கொரியாவின் இரு F 35 ஏ எஸ் மற்றும் அமெரிக்காவின் இரு எப் 22 போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதாக கருதி, வடகொரியா ஏவுகணை சோதனை நிகழ்த்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu