கடந்த நவம்பர் மாதத்தில் புதிய உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில், புதிதாக மற்றொரு செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோர் தென் கொரிய தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து, புதிய செயற்கைக்கோள் அனுப்ப உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. அண்டை நாடான ஜப்பானுக்கு இது பற்றிய முறைப்படி அறிவிப்பை அனுப்பி உள்ளது. இன்று முதல் ஜூன் 3ம் தேதி வரை பாதுகாப்பு எச்சரிக்கைகளுடன் செயற்கைக்கோள் எதுவும் முயற்சிகள் நடைபெறும் என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த திட்டத்திற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ராக்கெட் திட்டத்தை கைவிடும் படி வடகொரியாவை வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.