யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வெளியிட்ட வடகொரியா

September 13, 2024

வட கொரியா தனது அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேச எதிர்ப்புகளை மீறி, தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, வடகொரியாவின் அணு ஆயுத திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், யுரேனியம் செறிவூட்டல் ஆலையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் பார்வையிடுவது போல காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த புகைப்படம், வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் தொடர்பான அச்சத்தை […]

வட கொரியா தனது அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேச எதிர்ப்புகளை மீறி, தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, வடகொரியாவின் அணு ஆயுத திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், யுரேனியம் செறிவூட்டல் ஆலையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் பார்வையிடுவது போல காட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த புகைப்படம், வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. கிம் ஜாங் உன், அணு ஆயுத தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu