அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் தங்களுடைய வான் பரப்பில் நுழைந்ததாக வட கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வட கொரியாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் தங்களுடைய வான் பரப்பில் நுழைந்ததாக வட கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த விமானத்தை போர் விமானங்கள் கொண்டு விரட்டி அடித்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. தென் கொரிய அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமரை அதிபர் ஜோ பிடென் விரைவில் சந்தித்து பேச உள்ளார். தென்கொரியாவும் அமெரிக்காவும் ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.