வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இதில் தமிழ்நாடு புதுச்சேரி ஒவ்வொரு ஆண்டும் அதிக மழைப்பொழிவை பெற்று வருகிறது. நடப்பு ஆண்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் தற்போது வரை 38.6 சென்டிமீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 4 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மேடன் ஜூலியன் ஆசிலேசன் (எம் ஜே ஓ) என்று அழைக்கப்படும் வானிலை நிகழ்வு ஆகும். இது இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீண்டும் திரும்புவதால் இந்த பருவமழை நீடிப்பதாக கூறப்படுகிறது.














