இ- சிகரெட் விற்பனை செய்து வந்த இணையதளங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இ-சிகரெட் மீதான தடையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவித்துள்ளது. இந்தியாவில் இ- சிகரெட் விற்பனையில் ஈடுபடுவது, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில இணையதளங்கள் இ-சிகரெட் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் 15 இணையதளங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இ- சிகரெட் விற்பனை, விளம்பரங்களில் ஈடுபடுதல் போன்றவற்றை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. நோட்டீசை தொடர்ந்து 4 இணையதளங்கள் விற்பனையை நிறுத்தி உள்ளதாகவும், மற்ற இணையதளங்கள் பதிலளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. பதில் அளிக்காத இணையதளங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.














