இந்தியாவில், வாகன விற்பனை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது

December 9, 2022

நவம்பர் மாதத்தில், இந்திய வாகன விற்பனை துறை, வரலாற்று உச்ச விற்பனையை பதிவு செய்துள்ளது. வருடாந்திர அடிப்படையில், நவம்பர் மாத வாகன விற்பனை 26% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக வாகன டீலர்கள் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 23.80 லட்சம் வாகனங்கள் நவம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டான 2019 ஆம் ஆண்டின் விற்பனையை விட உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், அனைத்து வகையான வாகன விற்பனையிலும் னவன்மர் மாதத்தில் வளர்ச்சி பதிவாகியுள்ளது. இருசக்கர […]

நவம்பர் மாதத்தில், இந்திய வாகன விற்பனை துறை, வரலாற்று உச்ச விற்பனையை பதிவு செய்துள்ளது.

வருடாந்திர அடிப்படையில், நவம்பர் மாத வாகன விற்பனை 26% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக வாகன டீலர்கள் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 23.80 லட்சம் வாகனங்கள் நவம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டான 2019 ஆம் ஆண்டின் விற்பனையை விட உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், அனைத்து வகையான வாகன விற்பனையிலும் னவன்மர் மாதத்தில் வளர்ச்சி பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகிய பிரிவுகளில், 24% , 80% , 21% , 57% , 33% வளர்ச்சி முறையே பதிவாகியுள்ளது. இது இந்திய வாகனத் துறையின் வரலாற்று வளர்ச்சி என்று டீலர்கள் அசோசியேஷன் தலைவர் மணிஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu