செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான என்விடியா, சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தி உள்ளது. அதன்படி, உலகின் 2வது பெரிய நிறுவனமாக முன்னேறியுள்ளது.
செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததால், என்விடியா நிறுவனம் மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது. தொடர்ந்து 6 மாதங்களாக என்விடியா பங்குகள் ஏறுமுகத்தில் உள்ளன. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 147% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.15 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3003 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1224.4 டாலர்கள் அளவில் உள்ளது.