சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் சந்திரகாச்சி அதிவிரைவு ரயில் (எண்: 22808) வியாழக்கிழமை (நவ.2) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், பெங்களூரில் இருந்து ஹௌராவுக்கு காட்பாடி வழியாக செல்லும் ஹம்சாபர் விரைவு ரயிலும் (எண்: 22888) ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாகச் செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 12864) வியாழக்கிழமை (நவ.2) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல், ராமேசுவரம் ஓகா விரைவு ரயில் (எண்: 16733) வெள்ளிக்கிழமை (நவ.3) திருப்பதி வழியாக செல்வதற்கு பதிலாக ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு இரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














