ஒடிசாவில் பத்ம விருதுகள் பெற்றவருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் அறிவிப்பு

March 14, 2024

ஒடிசாவில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 25,000 மதிப்பூதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் கலை இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒடிசாவில் 90 பேர் பத்மஸ்ரீ, 11 பேர் பத்மபூஷன் மற்றும் நான்கு பேர் பத்ம விபூஷன் என 105 பேர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். பத்ம […]

ஒடிசாவில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 25,000 மதிப்பூதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் கலை இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒடிசாவில் 90 பேர் பத்மஸ்ரீ, 11 பேர் பத்மபூஷன் மற்றும் நான்கு பேர் பத்ம விபூஷன் என 105 பேர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். பத்ம விருதுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் மாதம்தோறும் அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியானது அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu