தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட தேர்தல் 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் 6 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை நிலவரப்படி தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று என்ற நண்பகலில் இறுதி வாக்கு பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.