கர்நாடகாவில் 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2003 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதனை மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என உறுதி அளித்தது. தற்போது 2006ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து முதல் மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள செய்தியில் 2006ம் ஆண்டுக்கு பின் 13 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என கூறியிருந்ததன் அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 13,000 ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.