இங்கிலாந்தின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்

April 24, 2023

டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். […]

டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே அறிவிப்பில், சட்டமியற்றுபவர் அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu