தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் பயணம் அதிகமாக இருப்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் டிக்கெட் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் தனியார் ஆம்னி பஸ்களின் கூட்டம் குறைவதில்லை. இக்கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினவிழா ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை வருவதால் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்திருக்கும் எண்ணிக்கையின் அளவும் நிரம்பிவிட்டன. வழக்கமாக இயங்கும் ரயில்களில் காத்திருப்பு பட்டியல் 300 தாண்டி உள்ளது.