உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் தினமும் ராமரை தரிசித்து வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் இவரை தரிசனம் செய்துள்ளனர். மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் காணிக்கையாக ரூபாய் 3 கோடியே 17 லட்சம் செலுத்தபட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.